Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 18 ஜூலை (ஹி.ச)
திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் இரண்டு நாள் கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏலகிரியில் கோடை விழாவை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவினை வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் இன்று காலை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி மற்றும் புகைப்படக் கண்காட்சிகளை அவர் பார்வையிட்டார்.
விழாவின் ஒரு பகுதியாக ஏலகிரி படகு இல்லத்தில் படகுப் போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இயற்கை பூங்கா, முருகன் கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுற்றுலாத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b