கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமெண்டில் படை வீரர் - மங்கள் பாண்டே..!
தமிழ்நாடு, 19 ஜூலை (ஹி.ச.) மங்கள் பாண்டே (Mangal Pandey), 1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் (சிப்பாய் கலகம்) முதல் தீப்பொறியாகக் கருதப்படும் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி
G


தமிழ்நாடு, 19 ஜூலை (ஹி.ச.)

மங்கள் பாண்டே (Mangal Pandey), 1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் (சிப்பாய் கலகம்) முதல் தீப்பொறியாகக் கருதப்படும் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறைக்கு எதிராக முதன்முதலில் ஆயுதம் ஏந்திப் புரட்சி செய்ததால், இந்திய வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார்.

இவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமெண்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.

கைது மற்றும் தியாகம்:

ஆங்கிலேயப் படைகளால் சூழப்பட்ட மங்கள் பாண்டே, அவர்களிடம் கைதியாகச் சிக்க விரும்பாமல், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார்.

ஆனால், படுகாயங்களுடன் உயிர் பிழைத்த அவரை ஆங்கிலேய ராணுவம் கைது செய்தது.

ராணுவ நீதிமன்ற விசாரணக்குப் பின், அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

மங்கள் பாண்டேவின் வரலாற்றை சித்தரிக்கும்

The Rising என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது.

வரலாற்றுத் தாக்கம்:

மங்கள் பாண்டேயின் இந்த வீர மரணம் வீண் போகவில்லை.

பாரக்பூரில் அவர் ஏற்றிய புரட்சித் தீ, மீரட், டெல்லி, ஜான்சி மற்றும் கான்பூர் என ஒட்டுமொத்த வட இந்தியா முழுவதும் 1857 பெரும் புரட்சியாக (சிப்பாய் கலகம்) வெடித்தது.

இதன் விளைவாகவே கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சி தொடங்கியது. இவரது தியாகத்தைப் போற்றும் வகையில் இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J