மூன்றாவது தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ்குமார் - காசு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பாடகர் வேல்முருகன்...!
சென்னை, 19 ஜூலை (ஹி.ச.) அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் வென்றுள்ளார். இதன் மூலம், அவர் மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெறும் பெருமையை பெற்றுள்ளார்.
ஜிவி


சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் வென்றுள்ளார்.

இதன் மூலம், அவர் மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெறும் பெருமையை பெற்றுள்ளார்.

இந்தச் சாதனையை முன்னிட்டு, பின்னணி பாடகர் வேல்முருகன், ஜி.வி. பிரகாஷ்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, புத்தம் புதிய நாணயங்களால் உருவாக்கப்பட்ட காசு மாலையை அணிவித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரசாதத்தையும் ஜி.வி. பிரகாஷ்குமாரிடம் வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது, இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் உடனிருந்தார். ஜி.வி. பிரகாஷ்குமாரின் தேசிய விருது சாதனைக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P