Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர் , 19 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இராஜபாளையம் யுகம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 124 மாணவ மாணவிகள், தொடர்ந்து இரண்டு மணி நேரம் 4
(124 )நிமிடம் 100 மீட்டர் தடத்தில் ஸ்கேட்டிங் மாரத்தானில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை யுகம் ஸ்போர்ட்ஸ் அகடாமி செயலாளர் இசக்கிமுத்து மாஸ்டர் ஜெயபால் ரமேஷ் அருண் செய்திருந்தனர்.
ஆஸ்கார் உலக சாதனை நிறுவனர் கதிரவன் மற்றும் நடுவர் கருணா ஆகியோர் கலந்து கொண்டு ஆஸ்கர் சாதனையை ரெக்கார்டில் பதிவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் இராஜபாளையம் நகர்மன்றத் துணைத் தலைவி கல்பனா குழந்தைவேல் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA