Enter your Email Address to subscribe to our newsletters

இராஜபாளையம், 19 ஜூலை
(ஹி.ச.)
இராஜபாளையத்தில்
வீ.த.லீடர்ஸ் செயல் திட்ட கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது
வீ.த.லீடர்ஸ் விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து பிரிந்து 30 க்கும் மேற்பட்டோர் தங்களை வீ.த.லீடர்ஸ் அமைப்பில் இணைத்துக் கொண்டனர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராம் வீத லீடர் செயல்திட்ட கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் துணை மாவட்ட ஆட்சியாளர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார் இந்தக் கூட்டத்தில் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உறுதி உறுதிமொழி ஏற்கப்பட்டது
இதை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் பயணித்த கராஜபாளையம் முன்னாள் யூனியன் சேர்மன் பொன்னுத்தாய் வீத லீடர்ஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் தலைமையில் இன்று 30 க்கும் மேற்பட்டோர் தங்களை வீ..த.லிடர்ஸ் அமைப்பில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு மாவட்ட தலைவர் ஜெயராம் பொன்னாடை போற்றி வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அண்ணாமலை நற்பணி மன்ற பயணித்தில் மாவட்ட செயலாளர் இருந்த சக்திவேல்
நகர தலைவர் தட்சிணாமூர்த்தி மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணா கார்த்தி மற்றும் நிர்வாகிகள் செங்கல்வராயன் டாக்டர் விக்ரம் வெங்கடேஷ் சரவணராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட செல்வி நன்றி உரையாற்றினார்
Hindusthan Samachar / Durai.J