Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 02 ஜூலை (ஹி.ச.)
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான மஹந்த் தினேந்திர தாஸ் மகராஜ், அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு இன்று பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய மஹந்த் தாஸ், ராய் கூறியதாவது,
யாரைப் பற்றியும் ஒருபோதும் தவறாகப் பேசியதில்லை. ராமபிரானுக்கு எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் சேவை செய்து வருகின்றேன்.
சம்பத் ராயை 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். அந்தக் காலகட்டத்தில் எந்தத் தவறான நடத்தையையும் நான் அவரிடம் காணவில்லை.
அவர் மனம், புத்தி, செல்வம் அனைத்தையும் அர்ப்பணித்து ராமலல்லாவுக்குச் சேவை செய்கிறார். ஒரு ரூபாய் கிடைத்தாலும் அதை ராமலல்லாவுக்கே வழங்குகிறார்.
ராய் அனைத்து விஷயங்களையும் அறக்கட்டளைக் கூட்டங்களில் வெளிப்படையாகத் தெரிவிப்பதுடன், அங்கு எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறார். சம்பத் ராயிடம் நான் எந்தத் தவறையும் காணவில்லை. தவறு இருந்திருந்தால், அதை நானே தவறு என்று சொல்லியிருப்பேன்.
ஜூலை 6 ஆம் தேதி கூட்டம் சோட்டி சாவ்னியில், அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தலைமையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கோயில் நன்கொடைகளில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு விசாரணையை முடிக்க 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வழக்கை விரிவாக ஆய்வு செய்ய முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்ப முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b