Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரோடு இணைந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 நாள் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்த வாங்சுங்கை டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
டெல்லி போலீசார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சியை (CJP) சேர்ந்த ஆர்வலர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த தயாராகி வருகின்றனர்.
மேலும் காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தேர்வு சீர்திருத்தம் தொடர்பான தங்களது நீண்டகால கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இன்று தெரிவித்தார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தாஸ்,
நிர்வாகம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறது. அவர்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளனர், ஆனால் நாங்கள் மனம் திறந்து அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளோம்.
இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து எந்த தெளிவும் இல்லை. பந்து அவர்கள் களத்தில் தான் உள்ளது.
சோனம் ஜி இதுவரை சீராக உள்ளார், அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார். தங்களை சிறிதும் கேட்காத மிகவும் கடினமான, செயலிழந்த இந்த அமைப்பை எதிர்த்து இறுதியாக விழித்தெழுந்துள்ள இந்த நாட்டின் இளம் போராட்டக்காரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமைதியான பேரணி விரைவில் நடைபெறும். கடந்த 30 நாட்களாக அமைதியான போராட்டக்காரர்கள் இங்கு கூடியுள்ளனர், மேலும் அமைதியான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது மற்றும் எங்கள் கருத்துக்களை எவ்வாறு முன்வைப்பது என்பதை நாங்கள் காட்டியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணிக்கு எந்த அனுமதியும் கோரப்படவில்லை, வழங்கப்படவில்லை என்று டெல்லி போலீசார் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளனர்.
புது டெல்லி மாவட்டத்தில் தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புது டெல்லி மாவட்டத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163 இன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன, இது முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 க்கு இணையானது.
முன் அனுமதியுடன் ஜந்தர் மந்தரில் நியமிக்கப்பட்ட போராட்ட தளத்தைத் தவிர, போராட்ட பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதுகாக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பதற்கும், முக்கிய அரசு நிறுவனங்களை பாதுகாப்பதற்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
தடை உத்தரவுகளை மீறும் எந்தவொரு நபரும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 223 மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b