Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 20 ஜூலை (ஹி.ச.)
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில், சில இளைஞர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில், பைக்குகளின் பக்கவாட்டு ஸ்டாண்டுகளை சாலையில் தேய்த்து தீப்பொறி பறக்கச் செய்தபடி அதிவேகமாக சென்ற இளைஞர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கிய பெற்றோர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கிணத்துக்கடவு - கோவில்பாளையம் சாலையில் கார் ஒன்றில் பயணித்த இளைஞர்கள், ஜன்னல்களுக்கு வெளியே தொங்கியபடியும், ஒருவர் காரின் மேற்கூரையில் அமர்ந்தபடியும், அதிவேகத்தில் காரை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆபத்தான சாகசத்தை பின்னால் வந்த வாகனத்தில் இருந்த பயணிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P