சார்ஜில் இருந்த இரண்டு இ-பைக்குகளில் தீ விபத்து - குடியிருப்புக்குள் பரவியதில் ஒருவர் படுகாயம்
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் , 20 ஜூலை (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் வால்ஹேகர்வாடி பகுதியில் உள்ள டக்டோபா சவுக் அருகே இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சார்ஜ் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மின்சார இருசக்கர வாகனங்க
Fire breaks out in two e-bikes while charging


பிம்ப்ரி-சிஞ்ச்வாட் , 20 ஜூலை (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் வால்ஹேகர்வாடி பகுதியில் உள்ள டக்டோபா சவுக் அருகே இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சார்ஜ் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களில் திடீரென தீப்பிடித்து, அந்த தீ அருகில் இருந்த இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கும் பரவியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

மின்சார இருசக்கர வாகனங்கள் தரை தளத்தில் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது தீப்பிடித்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தீ வேகமாக பரவி இரு வாகனங்களையும் முழுமையாக எரித்ததோடு, அருகில் இருந்த கட்டிடத்தையும் சூழ்ந்தது.

இது குறித்து தீயணைப்பு வீரர் ஷாஜாஜி கோபன்கர் கூறுகையில்,

வால்ஹேகர்வாடி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக காலை 7.18 மணிக்கு தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

சம்பவ இடத்தில் தரை தளம் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் குடியிருப்பு ஒன்றில் மக்கள் சிக்கியிருந்தனர். முதற்கட்ட விசாரணையில் தரை தளத்தில் மின்சார பைக் ஒன்று சார்ஜ் செய்யப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ஒருவரை மீட்டுள்ளோம், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரண்டு பைக்குகள் எரிந்து நாசமாகின, ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. வேறு பெரிய சேதம் எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b