இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்டவர் - உமாசங்கர் ஜோஷி...!
தமிழ்நாடு, 21 ஜூலை (ஹி.ச.) உமாசங்கர் ஜெதலால் ஜோசி (Umashankar Jethalal Joshi) குஜராத்தி இலக்கியத்திற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக அறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற இந்திய கவிஞர், அறிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இந்திய இலக்கிய உலகின் மிக உயரி
G


தமிழ்நாடு, 21 ஜூலை (ஹி.ச.)

உமாசங்கர் ஜெதலால் ஜோசி (Umashankar Jethalal Joshi) குஜராத்தி இலக்கியத்திற்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக அறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற இந்திய கவிஞர், அறிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார்.

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய விருதான ஞானபீட விருதை 1967 ஆம் ஆண்டில் (அவரது 'நிஷீத்' கவிதைத் தொகுப்பிற்காக) வென்றார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (Umashankar Joshi) 1911ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தின் பாம்னா கிராமத்தில் பிறந்தார்.

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

இவருடைய 'விஸ்வ சாந்தி' என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.

அதை தொடர்ந்து இவர் இயற்றிய படைப்புகள் குஜராத் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன.

ஞானபீட விருது, சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

புனைப்பெயர்கள்: குஜராத்தி இலக்கிய உலகில் இவர் 'வாசுகி' மற்றும் 'ஷ்ரவன்' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

தாக்கம்: மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930 இல் சுதந்திரப் போராட்டத்தின் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார்

முக்கிய இலக்கியப் படைப்புகள்:

கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் முத்திரை பதித்தார்.

விஸ்வசாந்தி (Vishwashanti)கங்கோத்ரி (Gangotri)நிஷீத் (Nishith)வசந்த வர்ஷா (Vasant Varsha)மகாபிரஸ்தான் (Mahaprasthan)

பெற்ற பதவிகளும் விருதுகளும்:

ஞானபீட விருது (1967),

ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் (1939),

சாகித்திய அகாதமி விருது (1973) மற்றும் சோவியத் லேண்ட் நேரு விருது.

பதவிகள்:

குஜராத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் (1966-1972) பணியாற்றினார்.

1970 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

டெல்லி சாகித்திய அகாதமியின் தலைவராகவும் (1978) பொறுப்பு வகித்தார்

இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்ட உமாசங்கர் ஜோஷி 1988ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J