சிக்கிம் சுரங்க விபத்து- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
சிக்கிம், 22 ஜூலை (ஹி.ச.) தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் சார்பில் சிக்கிம் மாநிலத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியின் போது சுரங்கப் பாதையில் நீண்ட நாட்களாக படிந்திருந்த மீத்தேன் வாயு திடீரென வெடித்து பயங்கர தீ விபத்த
சிக்கிம் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு


சிக்கிம், 22 ஜூலை (ஹி.ச.)

தேசிய நீர்மின் உற்பத்தி கழகம் சார்பில் சிக்கிம் மாநிலத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த பணியின் போது சுரங்கப் பாதையில் நீண்ட நாட்களாக படிந்திருந்த மீத்தேன் வாயு திடீரென வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாறைகளின் இடுக்குகளில் தேங்கியிருந்த வாயு, பணியின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடி விபத்தின் காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சுரங்கத்தின் வாயில் முழுவதுமாக மூடப்பட்டதால் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தீயும் புகையும் சூழ்ந்ததால் அவர்கள் உள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்புப் பணியில் இதுவரை 20 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b