Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 23 ஜூலை (ஹி.ச.)
தமிழக முதல்வர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது.
இதனால் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.
தேனி பெரியகுளத்தில் உள்ள திரையரங்கிலும் இதே நிலை காணப்பட்டது. ஆரவாரம், பட்டாசு, ஆட்டம் பாட்டம் என திருவிழா போல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் திரையரங்கிற்குள் பார்வையாளர்கள் நுழையும் போது திரையரங்க நிர்வாகம் சார்பில் வழக்கமான பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்திருந்த சில இளைஞர்கள் தங்களது பேன்ட் பாக்கெட்டுகளில் மற்றும் சட்டை பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை திரையரங்க ஊழியர்கள் பறிமுதல் செய்து வெளியே வைத்தனர்.
திரையரங்கு போன்ற பொது இடத்திற்குள் இது போன்ற போதைப் பொருட்களை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இவ்வாறு செயல்பட்டது அங்கிருந்த மற்ற பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குப்பைத் தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டதாகவும், அதன் பிறகே சம்பந்தப்பட்ட ரசிகர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து திரையரங்கில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திரையரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b