Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சை, 23 ஜூலை (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பிரகதீஸ்வரர் ஆலயத்தின் பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஆய்வின் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.
கோயிலின் மூலவர் கோபுரம், நந்தி மண்டபம், கருவறை சுற்றுப் பகுதிகள் மற்றும் திருச்சுற்று மாளிகைகளில் உள்ள சிற்பங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, கூட்ட நெரிசலை சமாளிப்பது, குடிநீர் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் கலந்தாலோசித்தனர்.
கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் குறித்த அறிக்கையை விரைவில் அரசுக்கு அனுப்பப்படும் என்றும், பாரம்பரியம் பாதிக்காத வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b