Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 23 ஜூலை (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள மூன்று திரையரங்குகளில் ஜனநாயகம் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள விஜய் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தைக் காண வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ்-க்கு மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டையில் ஜனநாயகன் திரைப்படத்தை காண வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக விஜய் குறித்த ப்ரமோஷன் வீடியோ வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் கண்ணீர் விட்டு அழுதார்.
இதை எடுத்து ஜனநாயகம் திரைப்படம் திரையிடப்பட்டது தொடர்ந்து, ரசிகர்களுடன் அமர்ந்து அமைச்சர் பர்வேஸ் திரைப்படத்தை கண்டு களித்து வருகிறார் ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b