பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி.ஆர். - மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்க முடிவு
ஐதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.) பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார். நாளை (ஜூலை 24) அவரது பிறந்தநாள் வரும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடி வரும் மாணவர்கள
A


ஐதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.)

பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

நாளை (ஜூலை 24) அவரது பிறந்தநாள் வரும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது :

பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதற்கு பதிலாக, மாணவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கே.டி.ஆர். கூறியுள்ளார்.

இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் பி.ஆர்.எஸ். மாணவர் அணி சார்பில் நாளை நடைபெறும் கண்டன போராட்டத்தில் கே.டி.ஆர். கலந்து கொள்ள உள்ளார். இந்த போராட்டம், நீட் முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பில் மாற்றங்கள் கோரி நடத்தப்படுகிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதும், தடியடி நடத்தியதாக கூறப்படும் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கே.டி.ஆர். பிறந்தநாள் விழாக்களை தவிர்த்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA