ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் ஜாமீன் - காவல்நிலையத்தில் ஆஜராகி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார்
சென்னை, 25 ஜூலை (ஹி.ச) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜாவிடம், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக சென்னை திருவல்லிக்கேணி க
ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் ஜாமீன் - காவல்நிலையத்தில் ஆஜராகி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார்


சென்னை, 25 ஜூலை (ஹி.ச)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜாவிடம், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இக்கொள்கை மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

அதன் நிபந்தனைப்படி, நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் அவர் சரணடைந்து ரூ.25,000-க்கான சொந்த ஜாமீன் மற்றும் இரு நபர் உத்தரவாதத்தைச் செலுத்தினார்.

இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை. சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் அவரது சகோதரர் அசோக்குமாரும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

முன்னதாக, கடந்த 2011-2015 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு, 15 மாத சிறைவாசத்திற்குப் பின் 2024 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b