Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 25 ஜூலை (ஹி.ச.)
ஆஷாடி ஏகாதசியை முன்னிட்டு, புகழ்பெற்ற பந்தர்பூர் வாரி யாத்திரை நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று மகாராஷ்டிராவில் உள்ள பந்தர்பூர் சந்திரபாகா நதிக்கரையில் லட்சக்கணக்கான வார்க்கரி பக்தர்கள் குவிந்தனர்.
பாரம்பரிய சடங்குகளின் ஒரு பகுதியாக ஏராளமான பக்தர்கள் நதியில் புனித நீராடினர். 800 ஆண்டுகள் பழமையான பந்தர்பூர் வாரி யாத்திரையில், லட்சக்கணக்கான பக்தர்கள் விட்டோபா பெருமானை தரிசிக்க பந்தர்பூருக்கு நடைபயணமாக வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை ஜூலை 7-ம் தேதி தொடங்கி ஜூலை 25-ம் தேதி நிறைவடைந்தது.
இன்று காலை மகாராஷ்டிர அமைச்சர் கிரீஷ் மகாஜன் ஸ்ரீ விட்டல் - ருக்மிணி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து,செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நான் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகிறேன். ஏற்பாடுகளை கவனிக்க வருகிறேன். பேரிடர் மேலாண்மை எனது துறை. தற்போது கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருப்பதால் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மும்பை மேயர் ரிது தாவ்டேவும் ஸ்ரீ விட்டல்-ருக்மிணி கோவிலில் மகா பூஜை செய்தார்.
Hindusthan Samachar / vidya.b