பா.ம.க நிறுவனர் ராமதாஸிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 25 ஜூலை (ஹி.ச) பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து முன்
பா.ம.க நிறுவனர் ராமதாஸிற்கு  மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 25 ஜூலை (ஹி.ச)

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது. இதில், ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மகன் அன்புமணி, மருமகள் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b