தற்காலிகப் பணியாளர்களை நீக்குவதும் உண்மையான தீர்வு அல்ல! - மாணிக்கம் தாகூர் எம்.பி
சென்னை, 25 ஜூலை (ஹி.ச.) நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடியை முன்னிட்டு நடைபெற்று போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இவ்விவகாரத்தில் தற்காலிகப் பணியாளர்களை நீக்குவது உண்மையான தீர்வு அல்ல என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார். இது கு
தற்காலிகப் பணியாளர்களை நீக்குவதும் உண்மையான தீர்வு அல்ல! - மாணிக்கம் தாகூர் எம்.பி


சென்னை, 25 ஜூலை (ஹி.ச.)

நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடியை முன்னிட்டு நடைபெற்று போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இவ்விவகாரத்தில் தற்காலிகப் பணியாளர்களை நீக்குவது உண்மையான தீர்வு அல்ல என மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

152 கேள்வித்தாள் கசிவுகள் மற்றும் NEET வினாத்தாள் குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி போராடிய பிறகே

மோடி அரசு விழித்துக் கொண்டதா? ஆரம்பத்திலேயே விழித்திருந்தால் இந்த பாதிப்புகளைத் தடுத்திருக்கலாமே?

39 நிரந்தரப் பணியிடங்களில் வெறும் 24 பேர் மட்டுமே உள்ள நிலையில், 73 ஒப்பந்த ஊழியர்களையும் 124 Outsourced பணியாளர்களையும் நம்பி இயங்கும் NTA-வின் கட்டமைப்பு முற்றிலும் தோற்றுவிட்டது!

இன்ஸ்டாகிராமில் மாணவர்களைத் தேடிச் சென்று பேசுவது போல் நாடகம் போடுவது வீண்! உங்கள் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் போராடும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேச உங்களுக்கு என்ன தயக்கம்? ஏன் அதைச் செய்யவில்லை?

47 அதிகாரிகளை நீக்குவதும், தற்காலிகப் பணியாளர்களை நீக்குவதும் உண்மையான தீர்வு அல்ல! ஒட்டுமொத்த தேர்வு முறையுமே முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். இதற்காக தலைவர் ராகுல் காந்தி முன்வைக்கும் 3 முக்கியக் கோரிக்கைகளை மோடி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்:

1. மத்தியக் கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

2. தேர்வு குளறுபடிகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தவறிய அரசு குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

3. டெல்லி சம்பவங்களில் மாணவர்களுக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து FIR-களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b