Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 25 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஐய பாலாஜி துவக்கி வைத்து பணி ஆணையை வழங்கினர்.
கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆகியோருடன் பயணித்தேன் அதே வழியில் ஜோசப் விஜய் உடன் பயணித்து வருகிறேன்,
இளைஞர்கள் இளம்பெண்கள் வேலை தேடி இந்த முகாமிற்கு வந்துள்ளீர்கள். உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்ற அரசு உள்ளது.
நீங்கள் இல்லை என்றால் நாங்கள் மேடையில் ஏறி பேசியிருக்க முடியாது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது நீங்கள் தான்.
மாற்று கட்சியினர் 30 கோடி, 40 கோடி செலவு செய்த நிலையில், நமது ஆட்சியில் வெறும் 75 ஆயிரம் செலவு செய்வது வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 340 நிறுவனங்கள் வருகை புரிந்துள்ளது. சுமார் 3000-க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இன்று கிடைக்கப்பெறுகிறது.
இந்தியாவின் தனித்திறமை படைக்கும் தலைவர் ஒரே தலைவர் நமது முதல்வர் மட்டும்தான் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN