Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 25 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகேயுள்ள அத்தியூர் தனியார் திருமண மண்டபத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னிஅரசு,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டுமே போதாது. ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டிற்கும் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
மேலும், நீட் தேர்வு குறித்த தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்த அவர், நீட் தேர்வு முறை என்பதே ஒரு மிகப்பெரிய ஊழல். இது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதைத் தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட ஒரு சனாதன யுக்தி ஆகும்.
இதையே தான் நாடாளுமன்றத்தில் எங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களும் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் முதன்மையான குறிக்கோள் என உறுதியளித்துப் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அண்ணல் அம்பேத்கரின் சிலை, சேலம் மாவட்டத்தில் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வன்னியரசு,
விரைவில் எனது தலைமையில் சேலத்தில் அந்த அம்பேத்கர் சிலை பிரம்மாண்டமான முறையில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN