Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 25 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாநகராட்சி உட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழாவானது நடைபெற்றது.
இதில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
அப்போது அமைச்சர் விஜய் பாலாஜி பேசுகையில்,
கடந்த காலங்களில் இல்லாத மாற்றம் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜோசப் விஜய் மீது நம்பிக்கையின் காரணமாக மிகப்பெரிய வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் தவெக அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் முதல்வர் திட்டங்களை வழங்கி வருகிறார்.
மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் ஈரோடு மாநகராட்சி முதன்மையான பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறது.
மக்களை தேடி மருத்துவம் என சும்மா சொல்லிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வீட்டிலுள்ள கர்ப்பிணிகள்,தாய்மார்களின் தேவைகளை அறிந்து அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வரவழைத்து;சிரமத்தை குறைக்க இந்த உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இனி மக்களுக்கு சிரமம் இன்றி அடிப்படை பரிசோதனையும் நேரடியாக அலைச்சல் இல்லாமல் சேவை செய்யவும் செவிலியர்களின் சுமை குறைக்க இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றுகின்றீர்கள். உங்களின் சேவை செய்து வருகின்றனர்.
உங்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் செய்து தருவார் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN