27-வது கார்கில் வெற்றி தினம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை
லடாக், 26 ஜூலை (ஹி.ச.) லடாக்கின் திராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், 1999-ம் ஆண்டு கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கார்கில் வெற்றி தினத்தை முன்ன
27-வது கார்கில் வெற்றி தினம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை


லடாக், 26 ஜூலை (ஹி.ச.)

லடாக்கின் திராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், 1999-ம் ஆண்டு கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

திராஸில் உள்ள லமோச்சென் கண்காணிப்பு மையத்தில் இந்திய ராணுவம் 'யுத் சன்ஸ்மரன்' என்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் பாதுகாப்புப் படைகளின் திறன் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

நமது வீரம் மிகு படையினரின் தேசபக்தியும் உறுதியும் நிலைத்திருக்கும் வரை, இந்தியாவை அச்சுறுத்த எவருக்கும் துணிவு வராது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் வீரர்களின் துணிச்சலால் தான் ஒவ்வொரு குடிமகனும் அச்சமின்றி தங்கள் கனவுகளைத் தொடர்ந்து நனவாக்க முடிகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், எதிரியின் எண்ணங்கள் மாறாமல் உள்ளன. மறைமுகப் போர் மற்றும் ஊடுருவல் போன்ற தீய தந்திரங்களை அது தொடர்ந்து கையாண்டு வருகிறது.

ஆனால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்புப் படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b