ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது நாள் விசாரணைக்கு ஆஜர்
சென்னை, 26 ஜூலை (ஹி.ச) தமிழகத்தில் ஆளும் தவெக கட்சியின் உத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு, அக்கட்சிக்கு எதிராக செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகத் தமிழக அரசை கவிழ்க்க சதி செய்ததாகக் கு
ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2வது நாள் விசாரணைக்கு ஆஜர்


சென்னை, 26 ஜூலை (ஹி.ச)

தமிழகத்தில் ஆளும் தவெக கட்சியின் உத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கு, அக்கட்சிக்கு எதிராக செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாகத் தமிழக அரசை கவிழ்க்க சதி செய்ததாகக் குதிரை பேர வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டம் தொடர்பாக காவல்துறை தரப்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சுமார் ஒரு மாத காலம் மறைமுகமாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

அதன்படி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் நிபந்தனையை ஏற்று நேற்று (ஜூலை 25) முதல் நாளாக ஆஜரான இவர்களிடம், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசிய வழக்கில் இன்று 2வது நாளாக கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b