போபாலில் போதைப்பொருளுக்கு எதிராக ‘ரன் ஃபார் லைஃப்’ மாரத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போபால், 26 ஜூலை (ஹி.ச.) போதைப்பொருள் தீமைக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போபால் காவல் ஆணையரகம் சார்பில் ‘ரன் ஃபார் லைஃப் - போதையிலிருந்து விலகி இருப்பது அவசியம் 2.0’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாரத்தான் ஓட்ட
‘Run for Life’ marathon awareness event against drugs in Bhopal


போபால், 26 ஜூலை (ஹி.ச.)

போதைப்பொருள் தீமைக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போபால் காவல் ஆணையரகம் சார்பில் ‘ரன் ஃபார் லைஃப் - போதையிலிருந்து விலகி இருப்பது அவசியம் 2.0’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாரத்தான் ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.

டி.டி. நகர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த மாரத்தானில், போதைப்பொருட்களின் தீங்குகள் குறித்தும், அவை தனிநபர்களையும் குடும்பங்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் காவல் ஆணையர் (தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு) மோனிகா சுக்லா பேசுகையில்,

புதிய தலைமுறையாக இருந்தாலும் சரி, பழைய தலைமுறையாக இருந்தாலும் சரி, அனைத்து வகையான போதைப் பொருட்களையும் ஒழிப்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தின் பொறுப்பும் கூட. நாம் ஆரோக்கியமாக இருக்க இதை செய்தாக வேண்டும் என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் டி. ஸ்ரீனிவாஸ் வர்மா பேசுகையில்,

மத்தியப் பிரதேச காவல்துறையும், சமூக நீதித்துறையும் இணைந்து ‘நஷே சே தூரி ஹை ஜரூர் 2.0’ பிரச்சாரத்தின் கீழ் டி.டி. நகர் விளையாட்டு அரங்கில் இந்த மாரத்தானை நடத்தியுள்ளன.

இதன் மூலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியை கொண்டு சேர்க்க விரும்புகிறோம்.

போதைப்பொருட்களிடமிருந்து விலகி இருங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள், போதைப்பொருட்களுக்கு இல்லை என்று சொல்லுங்கள்.

போதைப்பொருள் பழக்கம் மிகவும் தீவிரமான ஒரு நோய் என்றும், அது தனிநபர்களையும் குடும்பங்களையும் சீரழித்து வாழ்க்கையை துயரமாக்கிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் ஆரோக்கியமான, போதையில்லா வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Hindusthan Samachar / vidya.b