Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
அரசு வழக்கறிஞர் நியமனங்களில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் மேற்கொள்வதாகவும் த.வெ.க அரசு மீது திமுக தொழில்நுட்ப அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
திமுக தொழில்நுட்ப அணி இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
கோவில் சொத்தை ஆட்டையைப் போட்டு அப்பட்டமாக மாட்டிக்கொண்டாலும் தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக ‘PARTY FUND’ வாங்கிக் கொண்டிருக்கிறது த.வெ.க அரசு.
ஏற்கெனவே, அமைச்சர் ஆனந்த் பரிந்துரையில் ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றே அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்!
பின்னர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது, கன்னியாகுமரியில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் அனீஷ், “மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம்” என பேரம் பேசும் அடியோ வெளியாகி இருக்கிறது.
உங்க அண்ணன், உங்க விஜய் என வாய்கிழிய வெட்கமின்றி பேசும் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கு எங்கு என்னென்ன கமிசன் வாங்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாரா?
ஊழலை ஒழிக்க வந்த உத்தமன் போல பேசிய விஜய்தான் நம்பர் 1 ஊழல்வாதியென காலம் காட்டிக்கொண்டிருக்கிறது! சட்டத்துறையை கையில் வைத்திருக்கும் RSS நிர்மல் குமார் பற்றி நாம் சொல்லவே வேண்டாம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b