இந்திய மாலுமி உயிரிழந்த விவகாரம் - உக்ரைன் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி, 27 ஜூலை (ஹி.ச.) வணிகக் கப்பல் MV OMORFI மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் (Oleksandr Polishchuk) வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இன்று
மத்திய அரசு


புதுடெல்லி, 27 ஜூலை (ஹி.ச.)

வணிகக் கப்பல் MV OMORFI மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் (Oleksandr Polishchuk) வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு இன்று அழைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியா தனது கடுமையான கவலையை வெளிப்படுத்தியதுடன், வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மிகக் கடுமையாகக் கண்டித்தது.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிகாரிகளிடம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவிக்குமாறு தூதரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும், அப்பாவி பொதுமக்களான மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வணிகக் கப்பல்களை குறிவைக்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P