Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் இணைந்து நடத்திய தொழிலாளர் நலன் தொடர்பான கருத்தரங்கில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது ஃபர்வேஸ் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது,
சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
வட இந்தியாவைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் உள்பட எந்தக் குழந்தையும் தொழிலில் ஈடுபடக் கூடாது என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் தொடர்பாக, பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தொழிலாளர் நலத்துறை பட்ஜெட்டுக்காக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அரசின் நோக்கம்.
கடந்த ஆட்சியைப் பற்றி பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், கடந்த காலம் கடந்த காலமே.
எனவே தற்போதைய நிர்வாக நடவடிக்கைகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகின்றோம்.
இவ்வாறு அமைச்சர் முகமது ஃபர்வேஸ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b