கோவையில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம் திறப்பு விழா!
கோவை, 27 ஜூலை (ஹி.ச.) கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத
டிவிஎஸ்


கோவை, 27 ஜூலை (ஹி.ச.)

கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய லேண்ட்மார்க் ஷோரூமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தை, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பகுதி மேலாளர் வினீத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விக்டரி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்குதாரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சினி வினோத், பயாஸ் அகமது, தலைமை செயல் அதிகாரி வினோத் மற்றும் கே.வி.பி. ஆட்டோ கார்ப் எல்.எல்.பி. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை டீலர் பி. கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பணிமனை மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை மையத்தை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பிராந்திய மேலாளர் எஸ். மதன் திறந்து வைத்தார். மேலும், முதல் இருசக்கர வாகனம் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய ஷோரூமில் டி.வி.எஸ். நிறுவனத்தின் அனைத்து இருசக்கர வாகனங்களின் விற்பனை, அசல் உதிரிபாகங்கள் மற்றும் நவீன சேவை வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P