Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஜூலை (ஹி.ச.)
உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோய்க்கான காரணங்கள், அதன் ஆபத்துகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
வரலாறு: 1967 ஆம் ஆண்டில் 'ஹெபடைடிஸ் பி' (Hepatitis B) வைரஸைக் கண்டறிந்து, அதற்கான தடுப்பூசியையும் உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் பாரூச் ப்ளம்பெர்க் அவர்களின் பிறந்தநாளைக் கௌரவிக்கும் விதமாக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகளாவிய பொது சுகாதார விழிப்புணர்வு தினங்களில் இதுவும் ஒன்றாகும்.
2026 ஆம் ஆண்டின் மையக்கருத்து (Theme): இந்த ஆண்டிற்கான உலகளாவிய கருப்பொருள் “Hepatitis: Let's break it down” என்பதாகும்.
இது கல்லீரல் அழற்சி நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளைப் பெறுவதில் உள்ள தடைகளைத் தகர்ப்பதை வலியுறுத்துகிறது.
வைரஸ் வகைகள்: இந்த நோய் முக்கியமாக ஏ, பி, சி, டி, மற்றும் இ (A, B, C, D, E) ஆகிய ஐந்து வகையான வைரஸ்களால் ஏற்படுகிறது.
தீவிரம்: இதில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகிய வகைகள் கடுமையான கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோயை (Liver Cancer) உண்டாக்கக்கூடியவை.
பரவும் விதம்: பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், பாதுகாப்பற்ற உடலுறவு, மற்றும் அசுத்தமான உணவு அல்லது நீர் மூலமாக இந்த வைரஸ்கள் பரவுகின்றன.
கல்லீரலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:குழந்தைகளுக்குத் தவராமல் ஹெபடைடிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.காய்ச்சிய மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே பருக வேண்டும்.மது அருந்தும் பழக்கத்தைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி கண்ட மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
Hindusthan Samachar / Durai.J