சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக புகார் - பிரபல யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது 5 பிரிவுகளில் கிரிமினல் வழக்கு பதிவு
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீது மதுரை மாநகர போலீசார் கிரிம
Complaint filed over spreading defamatory remarks against Seeman


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீது மதுரை மாநகர போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமான் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பான, அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டு வந்ததாகவும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கி கலவரத்தை தூண்டும் நோக்கிலும் கருத்துக்களை பரப்பியதாகவும் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மதுரை போலீசார், யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது அவதூறு பரப்புதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b