Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்ம, 29 ஜூலை (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் மற்றும் மின்சார கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
இது குறித்து ரஜௌரி ஜல் சக்தி துறையின் செயற்பொறியாளர் சுல்ப்கர் அலி கூறுகையில்,
குடிநீர் ஆதாரங்களான தோண்டு கிணறுகள், உந்து கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க நாங்கள் தொட்டிகளை அமைத்து, குழாய் வசதியை விரிவுபடுத்தியுள்ளோம்.நிலைமையை மதிப்பிட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் 15 மின்மாற்றிகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சுமார் 200 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் மாவட்டம் முழுவதும் மின்சார விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின் வளர்ச்சித் துறை தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக ரஜௌரி மின் வளர்ச்சித் துறையின் செயற்பொறியாளர் ஜாவேத் அக்தர் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் ஏற்கனவே மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மீதமுள்ள இடங்களில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b