Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 29 ஜூலை (ஹி.ச.)
புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பவன் கேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று இது குறித்து,செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எந்த அடிப்படையில் பிரகலாத் ஜோஷி இதைச் சொல்கிறார்? பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் விடுதலையை வரவேற்று எல்லா இடங்களிலும் பேசியவர் அவர், எந்த அடிப்படையில் இதைக் கேட்கிறார்? அவர் ஒரு முட்டாளா? தான் என்ன பேசுகிறோம் என்பதை அவர் உணரவில்லையா? எல்லாமே இப்போது ஆவணப்படுத்தப்படுகிறது.
நிஷிகாந்த் துபே போல உண்மைகளை கற்பனை செய்ய வேண்டிய காலம் இதுவல்ல.
இது உண்மைகள் நிறைந்த காலம். கொஞ்சம் தோண்டிப் பார்த்தாலே உண்மை தெரிந்துவிடும்.
அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த நாட்டிற்கு முக்கியமான பிரச்சினைகளை அரசியலாக்கக் கூடாதா? நாங்கள் எதற்காக இங்கு இருக்கிறோம்? சரியான பிரச்சினைகளை நாங்கள் அரசியலாக்குகிறோம் என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
அதைச் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், தொடர்ந்து செய்வோம். இதைச் சமாளிக்குமாறு கிரண் ரிஜிஜுவிடம் கேளுங்கள்.
எங்கள் உத்தி மிகவும் எளிமையானது. இளைஞர்களுக்கு எதிராக அரசு செய்த அனைத்து அத்துமீறல்களுக்கும் நாங்கள் தொடர்ந்து அரசை பொறுப்பேற்க வைப்போம்.
உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, புதிய கல்வி அமைச்சர் ஏற்கனவே தனது கடந்தகால செயல்பாடுகள் மற்றும் பேச்சுகளால் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பொது தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 மீதான விவாதத்தின் போது மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா புதிய கல்வி அமைச்சருக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b