அமர்நாத் யாத்திரை 2026 இன்று முதல் தொடக்கம் - பஹல்காம் முகாம்களில் இருந்து முதல் குழு பக்தர்கள் பயணம்
பால்டால், 03 ஜூலை ( ஹி.ச) தெற்கு காஷ்மீர் இமயமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அமர்நாத்ஜி குகைக் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் 57 நாள் யாத்திரை இன்று முறைப்படி தொடங்கியது. பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய இரட்டை அடிவார முகாம்களில் இருந்து முதல் குழு அ
அமர்நாத் யாத்திரை 2026 இன்று முதல் தொடக்கம்   -  பஹல்காம் முகாம்களில் இருந்து முதல் குழு பக்தர்கள் பயணம்


பால்டால், 03 ஜூலை ( ஹி.ச)

தெற்கு காஷ்மீர் இமயமலையில் அமைந்துள்ள ஸ்ரீ அமர்நாத்ஜி குகைக் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் 57 நாள் யாத்திரை இன்று முறைப்படி தொடங்கியது.

பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய இரட்டை அடிவார முகாம்களில் இருந்து முதல் குழு அமர்நாத் யாத்ரீகர்கள் இன்று புறப்பட்டனர்.

‘பம் பம் போலே’ முழக்கங்களுக்கு மத்தியில், கந்தர்பால் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் புறப்படுவதை எளிதாக்க அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் இன்று அதிகாலையிலேயே பாதைகளை திறந்துவிட்டனர்.

பால்டால் அடிவார முகாமில் தூறல் காரணமாக வெப்பநிலை குறைந்தபோதும், 14 கிலோமீட்டர் நீளமுள்ள பாதை பக்தர்களுக்காக தெளிவாக வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

செங்குத்தான இந்த வழித்தடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பால்டால் நோடல் அதிகாரி ராகுல் யாதவ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் பால்டாலில் இருந்து யாத்திரை சுமுகமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. லேசான தூறல் உள்ளது, ஆனால் பாதை தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. இன்று சுமார் 10,000 பேர் யாத்திரைக்குப் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். வானிலை மேலும் மாறினால் பக்தர்களை தங்கவைக்க பல இடங்களில் அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று யாதவ் தெரிவித்தார்.

பாரம்பரியமானதும் ஒப்பீட்டளவில் குறைந்த சிரமம் கொண்டதுமான அனந்த்நாக் மாவட்டத்தின் நுன்வான்-பஹல்காம் அடிவார முகாமில், முதல் குழு பக்தர்கள் கடும் பல அடுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளன.

சவாலான இந்த பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், ஸ்ரீ அமர்நாத்ஜி ஷ்ரைன் போர்டு (SASB) மற்றும் உள்ளூர் அதிகாரிகள் செய்துள்ள ஏற்பாடுகளை பாராட்டினர்.

கூட்டத்தை நிர்வகிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் RFID டிராக்கிங் அமைப்புகள் மூலம் யாத்திரை நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.

ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 28-ம் தேதி இந்த யாத்திரை நிறைவடைய உள்ளது.

Hindusthan Samachar / vidya.b