Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 03 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மூன்று கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்ற கொலீஜியம்
(Supreme Court Collegium ) கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக மூன்று பேரை நியமிக்க பரிந்துரை செய்து ஒப்புதல் அளித்தது.
அந்த பரிந்துரைகள் பின்னர் மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
மத்திய அரசு அந்த பெயர்களை ஆய்வு செய்து, இந்திய தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தியது.
அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நியமன உத்தரவு வெளியிடப்பட்டது.
இதன்படி, கூடுதல் நீதிபதிகளாக சுனிதா காந்தம், அலபதி கிரிதர் மற்றும் புருஷோத்தம் குமார் சிந்தலபூடி
நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதி நியமன நடைமுறையில், முதலில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்வதும், அதன் பின்னர் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதும் வழக்கமான நடைமுறையாகும்.
அதன் பிறகு கொலீஜியம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின் குடியரசுத் தலைவர் இறுதி ஒப்புதல் வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA