Enter your Email Address to subscribe to our newsletters

அகர்தலா, 03 ஜூலை (ஹி.ச.)
அசாம் ரைஃபிள்ஸ் படையினர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அகர்தலா பிரிவுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், இன்று அகர்தலா ரயில் நிலையத்தில் சுமார் ரூ.1.27 கோடி மதிப்பிலான 55,626 பாட்டில் கோடீன் கலந்த இருமல் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
ரயில் வலையமைப்பு மூலம் கடத்தல் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகத்திற்குரிய சரக்கு பார்சலை கூட்டுப் படையினர் இடைமறித்து சோதனையிட்டபோது, சட்டவிரோதமாக விநியோகிக்க திட்டமிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடீன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேல் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக அகர்தலா வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் உறுதியாக உள்ளதாக அசாம் ரைஃபிள்ஸ் தெரிவித்துள்ளது.
கடத்தல் வலையமைப்புகளை முறியடித்து பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய மற்ற அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b