அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதமர் மோடி 5 கட்டளைகள்
புதுடெல்லி , 03 ஜூலை (ஹி.ச.) அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி 5 முக்கிய அன்பு கட்டளைகளை வெளியிட்டுள்ளார். இமயமலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் யாத்திரை இன்று தொடங்கிய நிலையில், பக்தர்களுக்கு அவர்
A


புதுடெல்லி , 03 ஜூலை (ஹி.ச.)

அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி 5 முக்கிய அன்பு கட்டளைகளை வெளியிட்டுள்ளார்.

இமயமலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் யாத்திரை இன்று தொடங்கிய நிலையில், பக்தர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பனி லிங்க தரிசனத்துக்காக அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த யாத்திரை மத பயணத்தை விட இந்தியாவின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், யாத்திரையின் போது பக்தர்களை அன்போடும் உபசரிப்போடும் வரவேற்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களை அவர் பாராட்டியுள்ளார்.

யாத்திரை பாதுகாப்பு மற்றும் நிர்வாக பணிகளில் ஈடுபடும் ராணுவம், காவல்துறை, பேரிடர் மீட்பு குழுக்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், யாத்திரை பக்தர்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய அறிவுரைகளையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அவை வருமாறு:

1. இயற்கை பாதுகாப்பு:

யாத்திரை பாதைகள் மற்றும் இமயமலைப் பகுதியின் தூய்மையை காக்க வேண்டும்.

2. அதிகாரிகளின் வழிகாட்டுதல்:

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

3. உள்ளூர் பொருளாதார ஆதரவு:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் வணிகங்களை ஆதரிக்க வேண்டும்.

4. மரக்கன்று நடுதல்:

யாத்திரை முடித்து வீடு திரும்பிய பின் குடும்பத்தினர் பெயரில் மரக்கன்று நட வேண்டும்.

5. ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்:

யாத்திரை முழுவதும் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை உணர்வை பேண வேண்டும்.

இந்த யாத்திரை வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA