திருவாரூரில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் கவலை
சென்னை, 30 ஜூலை (ஹி.ச.) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் அரசு நேரடி கொ
திருவாரூரில் நேரடி கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் கவலை


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 7 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் உரிய கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் போதிய லாரிகள் இல்லாததாலும், கிடங்குகளுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தாலும் கொள்முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதனால் புதிதாக நெல்லை கொண்டு வரும் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயமும் உள்ளது.

எனவே தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b