மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடினால் கடும் தண்டனை - அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
அமராவதி , 30 ஜூலை (ஹி.ச.) அரசு மற்றும் பொது தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், முறைகேடுகள் உள்ளிட்ட அநியாய நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பொது தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா–2026 மக்களவையில் நிறைவே
A


அமராவதி , 30 ஜூலை (ஹி.ச.)

அரசு மற்றும் பொது தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், முறைகேடுகள் உள்ளிட்ட அநியாய நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பொது தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா–2026 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் :

தேர்வு முறையின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதற்கும், மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்வதற்கும் இந்த சட்டம் முக்கியமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்துக்கு பிறகு மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் தேர்வை மீண்டும் நடத்தியதாக நாரா லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

பவன் கல்யாண் வரவேற்புஇந்த மசோதாவை ஆந்திர மாநில துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாணும் வரவேற்றுள்ளார்.

லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் முக்கியமான சட்டம் இது என்றும், தேர்வு அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ.வில் (NTA) விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதும் மத்திய அரசின் முக்கிய நடவடிக்கை என்றும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA