பாதுகாப்பின்றி படகில் மாணவர்களை அழைத்து சென்ற வனத்துறைக்கு வலுக்கும் கண்டனம்
கன்னியாகுமரி, 30 ஜூலை (ஹி.ச.) உலக சதுப்புநிலப் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை 26ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் சார்பில், மணக்குடி பகுதியின் நடுவே அமைந்துள்ள சதுப்பி
Students


கன்னியாகுமரி, 30 ஜூலை (ஹி.ச.)

உலக சதுப்புநிலப் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை 26ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் சார்பில், மணக்குடி பகுதியின் நடுவே அமைந்துள்ள சதுப்பிநில காடுகள் பகுதியில் உலக சதுப்புநிலப் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் சதுப்புநில காடுகளின் சிறப்புகள், அதன் முக்கியத்துவதும் குறித்து, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும், இதில் சதுப்புநிலக் காடுகளை சுத்தம் செய்தல், மாணவர்களுக்கான கல்வி களப்பயணங்கள், சூழலியல் தொடர்பான விழிப்புணர்வுகள் ஆகியவை இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, மணக்குடி பகுதிக்கு நடுவே அமைந்துள்ள சதுப்புநிலக் காட்டிற்கு கல்லூரி மாணவிகளை 2 படகுகளில் வனத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

வனத்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் படகில் சென்றபோது மாணவிகள் அனைவரும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பயணித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பார்த்த சமூக ஆர்வலர்களும், மாணவிகளின் பெற்றோர்களும் “படகில் பயணம் மேற்கொள்ளும் பொழுது பாதுகாப்பு உபகரணங்களை அணிவது கட்டாயமாகும்.

அதனை உறுதி செய்த பின்னர்தான் வனத்துறை அதிகாரிகள் மாணவிகளை படகில் பயணம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும்” என கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.

மேலும், “வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது வனத்துறையினரின் அலட்சியத்தை காட்டுகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN