Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 30 ஜூலை (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆகஸ்ட் 14, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ளார். விடுமுறையால் ஏற்படும் பணிநாள் இழப்பை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 29, 2026 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அமைகிறது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN