பள்ளி மாணவி உயிரிழப்பு - வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை
தருமபுரி, 30 ஜூலை (ஹி.ச.) தருமபுரி அடுத்த மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சுதி ராகவன் (26) என்பவர் மாணவி படிக்கும் பள்ளி வரை சென்று தன்னை
Dharmapuri


தருமபுரி, 30 ஜூலை (ஹி.ச.)

தருமபுரி அடுத்த மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சுதி ராகவன் (26) என்பவர் மாணவி படிக்கும் பள்ளி வரை சென்று தன்னை காதலிக்க சொல்லியும் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் கடத்திச் சென்று கொலை மிரட்டல் விட்டதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி கடந்த சனிக்கிழமை எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் மாணவியின் மரணத்திற்கு காரணமான சுதி ராகவனை கைது செய்யக்கோரி தருமபுரி மதிகோன் பாளையம் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN