Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செய்துள்ளார்.
அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
மருத்துவம், பெண்கள் கல்வி, சமூக நீதி ஆகிய துறைகளில் அழியாத தடம் பதித்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் பத்ம பூசன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்கிறோம்.
ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட சிறுமிகளுக்காக அவ்வை இல்லம் தொடங்கி ஆதரவாக இருந்தவர், மேலும் 1954இல் அடையாறு புற்றுநோய் நிலையத்தை தொடங்கி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார்.
பெண்களின் உரிமைகள், குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகள், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
அவரது கனவுகளும் கொள்கைகளும் என்றும் நமக்கு ஊக்கமாக இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b