தீரன் சின்னமலை நினைவு தினம் -ஆகஸ்ட் 3 ஆம் தேதி அ.ம.மு.க சார்பில் மரியாதை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
சென்னை, 30 ஜூலை (ஹி.ச) தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் மரியாதை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இ
தீரன் சின்னமலை நினைவு தினம் : ஆகஸ்ட் 3 ஆம் தேதி அ.ம.மு.க சார்பில் மரியாதை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு


சென்னை, 30 ஜூலை (ஹி.ச)

தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் மரியாதை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம்!

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் மரியாதை செலுத்துகிறார்கள்.

தாய்நாட்டின் விடுதலைக்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப்போராட்ட வீரரும், ஆங்கிலேயப் படைகளை தனது வீரத்தாலும், அசாத்தியமான போர் திறமையாலும் விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் வருகின்ற 03.08.2026, திங்கட்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, அன்றைய தினம் காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி, கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b