தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது - காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் கர்நாடக அரசு
பெங்களூரு , 31 ஜூலை (ஹி.ச.) தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக
A


பெங்களூரு , 31 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு ஏற்கனவே தேவையானதை விட அதிக அளவில் தண்ணீர் வழங்கியுள்ளோம்.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் பருவமழை நன்றாக பெய்ததால், தமிழகத்திற்கு போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

177 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 400 டி.எம்.சி.க்கும் அதிகமான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் பெரும்பகுதி கடலில் கலந்துவிட்டது.

தற்போது கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு சுமார் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்று தெரிவித்த போதிலும், எங்களின் விளக்கத்தை ஆணையம் ஏற்கவில்லை.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்பதை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.

மேலும், அந்த உத்தரவுக்கு எதிராக சட்டரீதியாக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

கர்நாடக அரசின் இந்த நிலைப்பாட்டால் காவிரி நீர் பங்கீடு விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA