வெண்கலப் பதக்கம் வென்ற சீமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி , 31 ஜூலை (ஹி.ச.) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை சீமா கலிராம்னா 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று இந்
A


புதுடெல்லி , 31 ஜூலை (ஹி.ச.)

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை சீமா கலிராம்னா 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

சீமாவின் இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

வெண்கலப் பதக்கம் வென்ற சீமாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான செயல்பாடு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

அவரது இந்த வெற்றி, நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும்.

எதிர்காலப் போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA