Enter your Email Address to subscribe to our newsletters

சூரத், 31 ஜூலை (ஹி.ச.)
வங்கக் கடலில் உருவான புயல் நெருங்கி வருவதை அடுத்து குஜராத் மாநிலம் சூரத் நகரம் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான வானிலையால் ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க மாநில நிர்வாகம் தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சூரத் நகர் மற்றும் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சூரத் மாநகராட்சி ஆணையர் மு. நாகராஜன் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மோசமான வானிலையை எதிர்நோக்கி, சூரத் நகர் மற்றும் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அவசரகால செயல்பாட்டு மையம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அவசர நிலைமைகளை சமாளிக்க முக்கிய இடங்களில் பேரிடர் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. NDRF மற்றும் SDRF குழுக்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவைப்பட்டால் கூடுதல் குழுக்களை உடனடியாக களத்தில் இறக்க முடியும். எந்தவொரு அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ள நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை.
பலத்த காற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களைத் தடுக்க சூரத் மாநகராட்சி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆபத்தை குறைக்கும் வகையில், 150 விளம்பர பதாகைகள் மற்றும் 100 ஆபத்தான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன, நகரம் முழுவதும் உள்ள உயர் கோபுர விளக்குகள் பாதுகாப்பாக பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களை தங்க வைப்பதற்காக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
என்று ஆணையர் கூறினார்.
இதற்கிடையே, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை குஜராத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
இன்று குஜராத் பகுதியில் ஒரு சில இடங்களில் மிக அதிக கனமழை முதல் வழக்கத்திற்கு மாறான அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை அறிக்கையின்படி,
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8.30 மணி அளவில் மேற்கு-மத்திய சத்தீஸ்கர் மற்றும் அதையொட்டிய விதர்பா மற்றும் தென்கிழக்கு மத்திய பிரதேச பகுதிகளில் மையம் கொண்டிருந்தது.
இந்த அமைப்பு மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் விதர்பா மற்றும் அதையொட்டிய தெற்கு மத்திய பிரதேசம் வழியாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை தாழ்வு மண்டலம் அதன் இயல்பான நிலைக்கு தெற்கே தீவிரமாக உள்ளது, அதே நேரத்தில் கிழக்கு-மேற்கு காற்று இடைவெளி மண்டலம் மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு தீபகற்ப இந்தியா முழுவதும் 21° வடக்கு அட்சரேகையில் நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் பகுதி மற்றும் சவுராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b