20 ஆண்டுகள் அரசியல் பயணம் நிறைவு – முதல்வர் ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத் , 04 ஜூலை (ஹி.ச.) தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு அவர் சமூக வலைதளத்தில் உணர்ச்சி பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்து, தனது அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்துள்ளார். மி
A


ஹைதராபாத் , 04 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

இதை முன்னிட்டு அவர் சமூக வலைதளத்தில் உணர்ச்சி பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்து, தனது அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

மிஜில் பகுதியில்

“ரேவந்த் ரெட்டி” என தொடங்கிய தனது பொதுவாழ்க்கை, இன்று மக்களின் அன்பும் ஆதரவுமால் “ரேவந்தண்ணா” என அழைக்கப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 20 ஆண்டு கால அரசியல் பயணம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கியமான அத்தியாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தன்னுடன் துணைநின்ற ஆதரவாளர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் நல விரும்பிகளுக்கு முதல்வர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் “தெலங்கானா மறுகட்டமைப்பின் உழைப்பாளி” எனும் வகையில் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் ரேவந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA