திருவள்ளூரில் அமோனியா வாயு அகற்றும் பணியில் தொய்வு - பலத்த காற்றால் மீட்புப் பணிகள் பாதிப்பு
திருவள்ளூர், 05 ஜூலை (ஹி.ச.) கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னிகைப்பேர் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல
Delay in ammonia gas removal operations in Tiruvallur


திருவள்ளூர், 05 ஜூலை (ஹி.ச.)

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னிகைப்பேர் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல் உபாதைகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவை அகற்றும் பணிகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எனினும், திருவள்ளூர் பகுதியில் தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக வாயுவை முழுமையாக அப்புறப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க தொய்வு ஏற்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், வாயு கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கசிவு ஏற்பட்ட பகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையங்களையும் காற்று பாதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து, காற்றின் வேகம் குறைந்தவுடன் வாயு அகற்றும் பணிகளை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து காற்றின் தரத்தை கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b