Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 ஜூலை (ஹி.ச.)
எர்னஸ்ட் வால்டர் மயர் (Ernst Walter Mayr) 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் முன்னணி படிமலர்ச்சி உயிரியலாளர் (Evolutionary Biologist) ஆவார்.
உலக அளவில் இவருடைய மிகச்சிறந்த பங்களிப்புகளுக்காக இவர் அன்போடு 20-ஆம் நூற்றாண்டின் டார்வின் (Darwin of the 20th century) என்று அழைக்கப்படுகிறார்
20ம் நூற்றாண்டின் பரிணாமவியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் வால்டர் மயர்
(Ernst Walter Mayr) 1904ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
இவர் சிறு வயதிலிருந்தே பறவையியலில் ஆர்வம் கொண்டிருந்ததால் பல அரிய பறவை இனங்களையும் எளிதாக அடையாளம் காட்டி விடுவார்.
இவர் தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார்.
1942ஆம் ஆண்டு உயிரினங்களின் மரபியல், பரிணாம தொகுப்புகள் தொடர்பான இவரது முதல் புத்தகம் வெளிவந்தது.
இவர் மொத்தம் 25 புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும், உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன.
மரபியல், வகைப்பாட்டியல் மற்றும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு ஆகியவற்றை ஒன்றிணைத்து நவீன படிமலர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்க முக்கியப் பங்காற்றினார்.
அமெரிக்காவின் புகழ்வாய்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், ஒப்பீட்டு விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
இவர் ஒரு சிறந்த பறவையியல் வல்லுநர் (Ornithologist). நியூ கினியா போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து, தன் வாழ்நாளில் பல புதிய பறவை இனங்களையும் கிளையினங்களையும் கண்டறிந்து பெயரிட்டார்.
உயிரியல் உலகிற்குப் பெரும் பங்காற்றிய எர்னஸ்ட் மயர், தனது 100-வது வயதிலும் தொடர்ந்து நூல்களையும் அறிவியல் கட்டுரைகளையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிற்றினங்கள் (Species) என்பதற்கு நவீன உயிரியல் வரையறையை இவர் வகுத்தார்.
ஒரு இனம் என்பது தங்களுக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்து கொள்ளக்கூடிய உயிரினங்களின் குழுவாகும் என்று விளக்கினார்.
பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட எர்னஸ்ட் மயர் 2005ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J